Advertisement

தவறாக விதிக்கப்பட்ட போக்குவரத்து அபராதத்தை ரத்து செய்யலாம்

செங்கல்பட்டு மாவட்ட மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறாத நிலையிலும் தவறுதலாக இ-சலான் (e-Challan) அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்வதற்காக காவல் நிலையம் அல்லது நீதிமன்றத்திற்கு நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை.

மத்திய அரசின் MParivahan செயலி மூலம் தவறாக விதிக்கப்பட்ட அபராதம் குறித்து புகார் அளிக்கலாம். செயலியில் உங்களது வாகன விவரங்கள், அபராத விவரங்கள் மற்றும் அதற்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பின்னர் சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல்துறையினர் புகாரை ஆய்வு செய்து, அபராதம் தவறாக விதிக்கப்பட்டது உறுதியானால் அதை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

Advertisement

இந்த வசதி மூலம் பொதுமக்கள் தேவையற்ற அலைச்சலை தவிர்க்க முடியும். வாகன உரிமையாளர்கள் தங்களது அபராத விவரங்களை அவ்வப்போது சரிபார்த்து, தவறுகள் இருந்தால் உடனடியாக ஆன்லைனில் முறையிடலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு 0120-4925505 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement