Advertisement

சென்னை திரும்பிய மக்கள் – கிளாம்பாக்கத்தில் கூட்ட நெரிசல்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விடுமுறை முடிந்து சென்னைக்குத் திரும்பும் தென் மாவட்ட மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி மற்றும் வார விடுமுறையைக் கொண்டாட சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள், விடுமுறை முடிந்து சாரை சாரையாக சென்னைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்க உள்ள நிலையில், தென் மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள் மூலம் சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.

Advertisement

வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரே உள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கிவிடுகின்றன. அங்கிருந்து சென்னை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டிய பயணிகள், தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து பேருந்து நிலைய வளாகத்திற்குள் சென்று மாநகரப் பேருந்துகள் மூலம் தங்களது பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்கின்றனர்.

ஒரே நேரத்தில் ஏராளமான பயணிகள் கிளாம்பாக்கம் பகுதியில் வந்து இறங்குவதால், அங்கு கடுமையான கூட்ட நெரிசல் காணப்படுகிறது. பயணிகள் தங்களது பகுதிகளுக்கு எளிதாகச் செல்லும் வகையில் கூடுதல் மாநகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

இருப்பினும், ஒரே நேரத்தில் அதிகப்படியான மக்கள் பேருந்து நிலையத்திற்கு வருவதால் மாநகரப் பேருந்துகளுக்காக நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

விடுமுறை முடிந்து சென்னைக்குத் திரும்பும் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் தொடர்ந்து கூட்ட நெரிசல் காணப்படுகிறது.

#கிளாம்பாக்கம் #கிளாம்பாக்கம்பேருந்துநிலையம் #கூட்டநெரிசல் #போக்குவரத்துநெரிசல் #சென்னை #தென்மாவட்டங்கள் #விடுமுறை #விடுமுறைமுடிவு #விநாயகர்சதுர்த்தி #பேருந்துகள் #மாநகரபேருந்து #அரசுபேருந்து #ஆம்னிபேருந்து #பயணிகள் #சென்னைபுறநகர் #சென்னைபோக்குவரத்து #கிளாம்பாக்கம்செய்திகள் #பயணிகள்கூட்டம் #தமிழ்நாடு #சென்னைசெய்திகள்

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement