தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் அரசு முறைப் பயணமாக லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் இருந்து புறப்பட்ட அவர், சென்னை விமான நிலையம் சென்றடைந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் நேற்று இரவு லண்டனுக்கு புறப்பட்டார்.
லண்டன் பயணத்தின்போது, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வமுள்ள தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து, மாநிலத்தின் தொழில் வாய்ப்புகள் மற்றும் முதலீட்டு சூழல் குறித்து எடுத்துரைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு புதிய முதலீடுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
#முதலமைச்சர்விஜய் #விஜய் #லண்டன்பயணம் #தமிழ்நாடு #முதலீடு #Investment #LondonVisit #TamilNaduInvestment #Business #Investors












