Advertisement

உலக மக்கள் தொகை தினம்: செங்கல்பட்டில் ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு பேரணி!

செங்கல்பட்டு மாவட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பிரம்மாண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செங்கல்பட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரை இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

Advertisement

பொதுமக்களிடையே மக்கள் தொகை பெருக்கம் மற்றும் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இப்பேரணியைச் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு. எம். வீரப்பன் அவர்கள் நேரில் கலந்துகொண்டு, கொடியசைத்து முறைப்படி துவக்கி வைத்தார்.

Advertisement

இப்பேரணியில் பங்கேற்றவர்கள் பெண்களின் இளம் வயது திருமணத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும், சிறுவயதில் ஏற்படும் மகப்பேறு கால பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டும் மற்றும் முதல் குழந்தைக்கும் இரண்டாவது குழந்தைக்கும் இடையே முறையான கால இடைவெளி வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய விழிப்புணர்வு கருத்துகளை வலியுறுத்தினர். மேலும், கருவுற்ற காலத்தில் பெண்களுக்கு வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல், பெண் கல்வியை மென்மேலும் ஊக்குவித்தல் மற்றும் ஆணும் பெண்ணும் சமம் என்று செயல்வடிவம் தர வேண்டும் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, அதுகுறித்த விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இந்த முக்கிய விழிப்புணர்வு நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரி செவிலியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement