Advertisement
,

மதுராந்தகம் இடைத்தேர்தல் – முதலாவதாக அதிரடி காட்டிய வேட்பாளர்

மதுராந்தகம் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், முதலாவது நபராக சுயேட்சை வேட்பாளர் அக்னி ஆழ்வார் வேட்புமனு தாக்கல் செய்து அதிரடி காட்டியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தேர்தல் மன்னன் என அழைக்கப்படும் அக்னி ஆழ்வார், தேர்தல் நடத்தும் அலுவலர் நரேந்திரனிடம் முதலாவது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Advertisement

வேட்புமனு தாக்கல் தொடங்கிய முதல் நாளிலேயே சுயேட்சை வேட்பாளர் ஒருவர் தனது மனுவை தாக்கல் செய்திருப்பது மதுராந்தகம் தொகுதி தேர்தல் களத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

#மதுராந்தகம் #மதுராந்தகம்_இடைத்தேர்தல் #இடைத்தேர்தல் #வேட்புமனு #வேட்பாளர் #சுயேட்சை_வேட்பாளர் #அக்னிஆழ்வார் #செங்கல்பட்டு #தேர்தல் #தேர்தல்2026

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement