Advertisement

செங்கல்பட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச சிகிச்சை

மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் ஒரே இடத்தில் கிடைக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கப்படுகின்றன.

♿ ‘விழுதுகள்’ திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த சேவை மையங்கள்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, உலக வங்கி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் (TN RIGHTS) மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான மறுவாழ்வு சேவைகள் மற்றும் அரசு நலத்திட்டங்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் “விழுதுகள்” என்ற பெயரில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் தொடங்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் தேவையான சேவைகள் எளிதாகவும், இலவசமாகவும் வழங்கப்படவுள்ளன.

Advertisement

🏥 மாவட்டம் முழுவதும் 22 சேவை மையங்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் வருவாய் கோட்ட அளவில் 3 ஒருங்கிணைந்த சேவை மையங்கள், வட்டார அளவில் 18 மையங்கள் மற்றும் ஒரு மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையம் என மொத்தம் 22 மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மையங்களில் பிசியோதெரபி, பேச்சு மற்றும் மொழிசார் சிகிச்சை, ஆக்குபேஷனல் தெரபி, சிறப்புக் கல்வி, உளவியல் ஆலோசனை, கண் பரிசோதனை, வழிவகை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு தரமான மறுவாழ்வு சேவைகள் நிபுணர்களால் இலவசமாக வழங்கப்படும்.

📋 அரசு நலத்திட்டங்களும் ஒரே இடத்தில்

இந்த மையங்கள் மூலம் UDID அட்டைக்கு விண்ணப்பித்தல், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கான பயிற்சி, அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் வழங்கப்பட உள்ளன. மேலும், தற்போது களப்பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று அவர்களின் தேவைகளை கண்டறிந்து, தேவையான மறுவாழ்வு சேவைகளைப் பெற வழிகாட்டி வருகின்றனர். கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் வாழும் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வதே தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் மு. வீரப்பன் தெரிவித்துள்ளார்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement