வண்டலூரைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் திருமணம் செய்வதாக நம்பிக்கை அளித்து அந்தரங்க வீடியோவை பெற்றுக்கொண்டு, பின்னர் சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வண்டலூரைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் முடிச்சூரைச் சேர்ந்த சிவராஜன் (28) பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், திருமணம் செய்து கொள்வதாக கூறி இளம்பெண்ணின் அந்தரங்க வீடியோவை பெற்றுக்கொண்டதாகவும், பின்னர் அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து இளம்பெண்ணின் தாய் தனலட்சுமி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சிவராஜனை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.













