Advertisement

தங்கம் விலையில் பெரிய மாற்றம் வருமா? புதிய கணிப்பு

ஈரான் மீது அமெரிக்காவின் போர்க் கோபம் குறைந்த பாடில்லை. போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் ஈரானை எப்படியாவது அடிபணிய வைத்துவிட வேண்டும் என்று அமெரிக்கா ஆசைப்படுகிறது. இதனால் உலக அளவில் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது.
இது மட்டுமன்றி வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் எவ்வாறு மாறும் என்பது குறித்து வெளியான புதிய கணிப்பு பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சர்வதேச அரசியல் சூழ்நிலைகளால் தங்கம் விலை உயருமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக விலைகள் குறைந்து இருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, உலகளவில் பதற்றம் அதிகரித்தது. இதன் காரணமாக தங்கம் விலை அதிகரிக்கும் என சந்தை நிபுணர்கள் கணித்திருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிவை சந்தித்தன. தற்போது விலைகள் நிலையான உயர்வு-சரிவு நிலையிலேயே உள்ளது.

Advertisement

இன்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.14,360 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,14,880 ஆகவும் விற்பனையாகிறது. அதேபோல், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.11,980 மற்றும் சவரனுக்கு ரூ.95,840 என உயர்வுடன் உள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.275 மற்றும் ஒரு கிலோ ரூ.2,75,000 ஆக விற்பனையாகிறது.

மற்றுபுறம், எம்.சி.எக்ஸ் சந்தையில் தங்கத்தின் முன்பேர வர்த்தகத்தில் விலை குறைந்து 10 கிராமுக்கு ரூ.1.54 லட்சமாக இருந்தாலும், சந்தை ஆதரவு காரணமாக ரூ.1.55 லட்சம் அளவில் நிலைத்திருக்கிறது. சர்வதேச சந்தையிலும் ஒரு அவுன்ஸ் தங்கம் 4,809 டாலராக குறைந்துள்ளது.

Advertisement

இந்த சரிவுக்கான முக்கிய காரணமாக அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை மீதான நம்பிக்கை கூறப்படுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து பங்கு சந்தைகளுக்கு தங்கள் முதலீட்டை மாற்றியுள்ளனர்.

இந்நிலையில், ஆக்மன்ட் புல்லியன் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், எதிர்காலத்தில் தங்கம் விலை ரூ.1.60 லட்சம் வரை உயர வாய்ப்பு இருப்பதாகவும், வெள்ளி விலை ரூ.2.55 லட்சம் முதல் ரூ.2.65 லட்சம் வரை செல்லக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு புதிய எதிர்பார்ப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement