Advertisement

“அமெரிக்காவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை!” – 49 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக்கூடும் என எச்சரிக்கை!

அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் கோடைக்கால வெப்பத்தின் தாக்கம் முன்னெப்பொழுதும் இல்லாத வகையில் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸ் (120 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை உயரக்கூடும் என அமெரிக்க தேசிய வானிலை மையம் (NWS) தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் உருவாகியுள்ள சக்திவாய்ந்த ‘ஹீட் டோம்’ (Heat Dome) எனப்படும் வெப்ப மண்டல வளிமண்டல நிகழ்வு காரணமாக, வெப்பக் காற்று வெளியேற முடியாமல் குறிப்பிட்ட பகுதிகளிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் கலிபோர்னியா, நெவாடா, அரியோனா, மிசிசிப்பி உள்ளிட்ட பல்வேறு தென்மேற்கு மாநிலங்களில் வழக்கத்தை விடப் பல மடங்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்தக் கடுமையான வெப்ப அலை எச்சரிக்கை (Extreme Heat Warning) காரணமாக, நாடு முழுவதிலும் சுமார் 4 கோடிக்கும் அதிகமான மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. பகல் நேரங்களில் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலை பதிவாகி வருவதால், பொதுமக்கள் உடலளவில் பெரும் அசௌகரியத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

Advertisement

கடுமையான வெப்பத்தின் காரணமாக மின்சாரத் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளதால், சில இடங்களில் மின் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. நிலைமையைக் கருத்தில் கொண்டு, முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகள் அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியில் வரவேண்டாம் என்றும், போதுமான அளவு நீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்கச் சுகாதாரத் துறை மற்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளன.

 

Advertisement

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement