Advertisement

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’: ஜூலை 29-ல் செங்கல்பட்டில்…

செங்கல்பட்டு வட்டத்தில் ஜூலை 29 அன்று நடைபெறும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனுக்கள் அளிக்கலாம்.

🏛️   “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம்

முந்தை திமுக அரசின்போது அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டடம் அறிமுகப்படுத்தப்பட்டது அந்த திட்டத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசும்   செயல்படுத்தி வருகிறது, அதன்படி  “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், செங்கல்பட்டு மாவட்டத்தில் அடுத்த கட்ட மக்கள் குறைதீர் முகாம் 2026 ஜூலை 29 அன்று நடைபெற உள்ளது. அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மற்றும் பொதுச் சேவைகளும் தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்வதற்காக இந்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசு அதிகாரிகள் நேரடியாக களத்திற்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்து, விரைந்து தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

Advertisement

📋 கள ஆய்வு மற்றும் மக்கள் குறைதீர்

இந்த திட்டத்தின் படி, ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் வட்ட அளவில் தங்கி கள ஆய்வு மேற்கொள்வார். அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதுடன், பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை நேரடியாக கேட்டு உரிய துறைகளுக்கு தீர்வு காண உத்தரவிடப்படும். இதன் மூலம் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் அனைத்தும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்வதே திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

📑 மாலை 4.30 முதல் 6 மணி வரை மனுக்கள் பெறப்படும்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, 2026 ஜூலை 29 அன்று செங்கல்பட்டு வட்டத்தில் இந்தத் திட்டம் நடைபெற உள்ளது. இத்திட்டத்தில் தங்களது கோரிக்கைகள், குறைகள் மற்றும் மனுக்களை வழங்க விரும்பும் பொதுமக்கள், செங்கல்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களது பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement