Advertisement

“மக்கள் இனி ஏசி பஸ்களில் தான் செல்ல வேண்டும்”; முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு!

தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இனி அரசு ஏசி பேருந்துகளில் தான் பயணிக்க வேண்டும் என்று முதலமைச்சர்  விஜய் உத்தரவிட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுப் பொதுமக்களின் நீண்ட தூர மற்றும் அன்றாடப் பயணங்களை எளிதாக்கும் வகையில், மக்கள் இனி அரசு ஏசி பேருந்துகளில் தான் பயணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்கள் தங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Advertisement

போக்குவரத்துத் துறையின் உள்கட்டமைப்பு மற்றும் புதிய மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்துப் பேசிய அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், தமிழக அரசின் புதிய போக்குவரத்துப் போக்குவரத்துக் கொள்கைகள் மற்றும் முதலமைச்சரின் வழிகாட்டுதல்களைச் செய்தியாளர்களிடம் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.

அமைச்சர் தனது பேட்டியில், “தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒருமுறை அரசுப் பேருந்தில் நேரடியாகப் பயணித்த போது, மக்களின் தேவையையும் தற்போதைய தட்பவெப்பச் சூழலையும் உற்று நோக்கினார். அப்போது அவர் என்னிடம், ‘தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் இனி ஏசி பேருந்துகளில் தான் பயணிக்க வேண்டும்; அதற்கு ஏற்றவாறு போக்குவரத்துத் துறையில் அதிக அளவில் புதிய ஏசி பேருந்துகளை வாங்குவதற்கான திட்டங்களை உடனே செயல்படுத்துங்கள்’ என்று மிகத் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கினார். அதனடிப்படையில், இனிவரும் காலங்களில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மூலமாகப் புதிய ஏசி பேருந்துகளை வாங்குவதற்கான அனைத்துத் தயாரிப்பு நடவடிக்கைகளும் தற்பொழுது முழு வீச்சில் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிட்டார்.

Advertisement

தொடர்ந்து தவெக அரசின் முதன்மைக் கொள்கை குறித்துப் பேசிய அமைச்சர், “குக்கிராமங்களையும் மாநகரங்களையும் தங்கு தடையின்றி இணைக்க வேண்டும் என்பதுதான் எங்களது முதலமைச்சரின் முதல் கொள்கையாக உள்ளது. தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் போக்குவரத்து இணைப்பு இல்லை என்ற பேச்சிற்கே இடம் இருக்கக் கூடாது என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். உழைக்கும் தொழிலாளர்களுக்கு உதவும் வகையிலும், துறையின் வருவாயைப் பெருக்குவதற்கும் பல்வேறு புதிய செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டு ஒவ்வொன்றாக நடைமுறைக்கு வரவுள்ளன” என்றார்.

மக்கள் பயன்பாட்டிற்காக அரசுப் போக்குவரத்துத் துறையில் புதிய ஏசி பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் வெளியிட்டுள்ள இந்தத் தகவல், ஒட்டுமொத்தப் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே மாபெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

 

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement