Advertisement

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழா – பக்தர்கள் திரளாக கிரிவலம்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு இரவு முழுவதும் நடைபெற்ற கிரிவலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை மாத பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 30 இரவு 10 மணி முதல் மே 1 இரவு 11 மணி வரை கிரிவலம் நடைபெற்றது.

Advertisement

இந்த நிகழ்வில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கிரிவலம் நடைபெறும் பாதையில் பக்தர்கள் ‘ஓம் நமசிவாய’ முழக்கத்துடன் பக்தி உணர்வோடு சுற்றி வந்தனர்.

பெருவிழாவை முன்னிட்டு கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் பாதுகாப்பாக கிரிவலம் செய்ய தேவையான ஏற்பாடுகளும் கோயில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

Advertisement

#Thirukazhukundram #Vedagiriswarar #ChitraPournami #Girivalam #TempleFestival

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement