Advertisement

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.15 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் திறப்பு

திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

திருக்கழுக்குன்றம் செங்கல்பட்டு சாலையில் அமைந்துள்ள பேரூராட்சி அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வரி செலுத்துதல், பல்வேறு சான்றிதழ்கள் பெறுதல் மற்றும் குறைகள் தொடர்பாக மனுக்கள் அளித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக வந்து செல்கின்றனர். மேலும், தாலுகா அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் கிரிவல பக்தர்களும் இந்த வழியாக அதிக அளவில் பயணிக்கின்றனர்.

Advertisement

இந்நிலையில், அப்பகுதியில் போதிய குடிநீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வந்தனர். இதையடுத்து காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டது.

புதிய குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை காஞ்சிபுரம் தொகுதி திமுக எம்.பி. செல்வம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த வசதி மூலம் பேரூராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை எளிதில் பெற்றுக்கொள்ள முடியும்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement