Advertisement

தென்காசி துப்பாக்கிச்சூடு: செங்கல்பட்டில் கண்டனம்

செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், தென்காசி மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பொதுமக்களிடையே மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.

கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி, தென்காசி மாவட்டம் மருதம்புத்தூர் பகுதியில் பனைத் தொழிலாளி மணிகண்டன் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. சட்டவிரோதமாக கள் இறக்கப்பட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனைக்கு சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா மீது தாக்குதல் நடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தற்காப்பு நடவடிக்கையாக போலீஸ் அதிகாரி துப்பாக்கி சூடு நடத்தியதில், மணிகண்டன் காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

Advertisement

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து நடந்த போராட்டங்களின் பின்னர், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், இந்த துப்பாக்கிச்சூட்டை கண்டித்து செங்கல்பட்டு மாவட்டத்தின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement