வேடந்தாங்கல் ஏரியில் சிக்கிய இளைஞர் ஒருவரை முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்து வேடந்தாங்கல் பகுதியில் தங்கி மா.சுப்பிரமணியன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் அவர் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் காலை நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது ஏரிப் பகுதியில் இருந்து ஒருவரின் முனகல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து அருகில் சென்று பார்த்தபோது, இளைஞர் ஒருவர் இரவு முழுவதும் சேற்றில் சிக்கி வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது தெரியவந்தது.
உடனடியாக செயல்பட்ட மா.சுப்பிரமணியன், அப்பகுதி மக்களின் உதவியுடன் சேற்றில் சிக்கிய இளைஞரை பத்திரமாக மீட்டார். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதையடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்ற மா.சுப்பிரமணியன், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அவருக்கு தேவையான உயர் சிகிச்சைகள் வழங்கப்படுவதை உறுதி செய்தார்.
இரவு முழுவதும் ஏரி சேற்றில் சிக்கித் தவித்த இளைஞரை காலை நடைபயிற்சியின்போது கவனித்து, துரிதமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய முன்னாள் அமைச்சரின் செயல் அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.
#வேடந்தாங்கல் #வேடந்தாங்கல்ஏரி #சிக்கியஇளைஞர் #இளைஞர்மீட்பு #மாசுப்பிரமணியன் #முன்னாள்அமைச்சர் #மதுராந்தகம் #மதுராந்தகம்இடைத்தேர்தல் #செங்கல்பட்டு #மீட்புப்பணி #மனிதாபிமானம் #Vedanthangal #VedanthangalLake #TrappedYouth #YouthRescue #MaSubramanian #FormerMinister #Madurantakam #MadurantakamByElection #Chengalpattu #RescueOperation #Humanity












