Advertisement

செங்கல்பட்டு பொதுமக்கள் எதிர்ப்பால், திணறும் நகராட்சி நிர்வாகம்!

பச்சையம்மன் கோயில் குப்பை பிரச்சனை காரணமாக செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 33 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கடந்த சில நாட்களாக நகராட்சி அலுவலக வளாகத்தின் பின்புறம் கொட்டப்பட்டு வருகிறது.

செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பச்சையம்மன் கோயில் பகுதியில் 2,000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக நகராட்சி குப்பைக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. செங்கல்பட்டு நகராட்சியின் 33 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் இந்தக் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வந்துள்ளன.

Advertisement

தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டதால், அந்தப் பகுதி முழுவதும் குப்பைகள் மலைபோல் குவிந்து காணப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். குப்பைகள் கொட்டுவதற்கு போதிய இடம் இல்லாததால் சாலையோரங்களிலும் குப்பைகள் கொட்டப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சாலையில் கொட்டப்படும் குப்பைகளை ஆடு, மாடு, நாய், பன்றி உள்ளிட்ட கால்நடைகள் கிளறுவதால் குப்பைகள் சாலை முழுவதும் சிதறிக் கிடப்பதாகவும், இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும், குப்பைகளில் இருந்து தேள், பூரான், விஷப்பூச்சிகள் மற்றும் புழுக்கள் வெளியேறி வீடுகளுக்குள்ளும் புகுந்து வருவதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், குப்பைகள் அடிக்கடி தீ வைத்து எரிக்கப்படுவதாகவும், இதனால் ஏற்படும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்புத்துறையினர் சிரமப்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்திலும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடியதாக கூறப்படுகிறது.

தீ அணைக்கப்பட்ட பின்னரும் குப்பைகளில் இருந்து வெளியேறிய கரும்புகையால் அப்பகுதி மக்கள் சுவாசக் கோளாறு மற்றும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள திருச்சி-சென்னை மற்றும் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் புகை சூழ்ந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து இதே நிலை நீடித்து வந்ததால், பச்சையம்மன் கோயில் பகுதி மக்கள் குப்பைக் கிடங்கை சுற்றி அடைத்து, இனிமேல் அங்கு குப்பைகள் கொட்ட அனுமதிக்க முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் நகராட்சி அலுவலக வளாகத்தின் பின்புறம் கொட்டப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. நகராட்சி துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் ஆல்பர்ட் மற்றும் சந்தானம் ஆகியோரின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குப்பைகள் சேகரிக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டு நந்தகுமார் என்பவருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நகராட்சி அலுவலக வளாகத்திலேயே குப்பைகள் கொட்டப்படுவதற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

நகராட்சி அலுவலக வளாகத்திலும் குப்பைகளை கொட்டுவதற்கு போதிய இடம் இல்லை என்பதால், இன்னும் ஓரிரு நாட்களில் அங்கும் குப்பைகள் மலைபோல் குவியும் நிலை ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனால், செங்கல்பட்டு நகரில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாகக் கொட்டுவதற்கு போதிய இடமின்றி நகராட்சி நிர்வாகம் சிக்கலை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. குப்பைகளை அகற்றி, மாற்று இடத்தில் முறையாகக் கையாளுவதற்கு நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#பச்சையம்மன்கோயில் #குப்பைபிரச்சனை #செங்கல்பட்டு #செங்கல்பட்டுநகராட்சி #குப்பைக்கிடங்கு #குப்பைகொட்டஎதிர்ப்பு #குப்பைமேலாண்மை #பொதுமக்கள்போராட்டம் #சுற்றுச்சூழல் #தீவிபத்து #கரும்புகை #மூச்சுத்திணறல் #குப்பைதீ #நகராட்சிநிர்வாகம் #குப்பைசேகரிப்பு #33வார்டுகள் #செங்கல்பட்டுசெய்திகள் #பொதுமக்கள்கோரிக்கை #சுகாதாரம் #கழிவுமேலாண்மை
#PachaiyammanTemple #GarbageProblem #Chengalpattu #ChengalpattuMunicipality #GarbageDump #GarbageDumping #WasteManagement #PublicProtest #Environment #FireAccident #SmokePollution #BreathingProblems #GarbageFire #MunicipalAdministration #WasteCollection #33Wards #ChengalpattuNews #PublicDemand #PublicHealth #WasteDisposal

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement