Advertisement

செங்கல்பட்டில் 40 விநாயகர் சிலைகள் ஊர்வலம் – மகாபலிபுரம் கடற்கரையில் கரைப்பு

செங்கல்பட்டில் 40 விநாயகர் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக மகாபலிபுரம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 14ஆம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழக காவல்துறை அனுமதியுடன் மாநிலம் முழுவதும் சுமார் 37,000 விநாயகர் சிலைகள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

Advertisement

செங்கல்பட்டு நகர் பகுதியில் மட்டும் 40 விநாயகர் சிலைகள் காவல்துறை அனுமதியுடன் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், நத்தம், பெரிய மணியக்காரத் தெரு, சின்ன மணியக்காரத் தெரு, கோகுலாபுரம், அனுமந்தபுத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்றது.

காவல்துறை அனுமதித்த விதிமுறைகளின்படி 10 அடிக்கு மேல் உயரம் இல்லாத வகையில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, எந்தவித அசம்பாவிதமும் இன்றி வழிபாடுகள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மாலை செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஊர்வலமாக மகாபலிபுரம் கடற்கரைக்கு கொண்டு செல்லப்பட்டன.

மகாபலிபுரம் கடற்கரையில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக மாவட்ட காவல்துறை சார்பில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சிலைகளை வாகனங்களில் இருந்து இறக்கி கடலுக்குள் கொண்டு செல்ல வசதியாக ராட்சத கிரேன் வசதிகளும், மணல் பரப்பில் சிலைகளை நகர்த்திச் செல்ல பிரத்யேக டிராலிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை அனுமதி அளித்துள்ள வழித்தடங்களில் அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெற்றது. பக்தர்கள் ‘கணபதி பாப்பா மோரியா’ என கோஷங்களை எழுப்பியபடி விநாயகர் சிலைகளை மகாபலிபுரம் கடற்கரைக்கு கொண்டு சென்றனர்.

#செங்கல்பட்டு #விநாயகர்சதுர்த்தி #விநாயகர்சிலைகள் #40விநாயகர்சிலைகள் #விநாயகர்சிலைஊர்வலம் #மகாபலிபுரம் #மகாபலிபுரம்கடற்கரை #சிலைஊர்வலம் #விநாயகர்சிலைகரைப்பு #போலீஸ்பாதுகாப்பு #செங்கல்பட்டுபோலீஸ் #விநாயகர்விழா #கணபதிபாப்பாமோரியா #பக்தர்கள் #தமிழ்நாடு #செங்கல்பட்டுசெய்திகள் #மகாபலிபுரம்செய்திகள் #கடற்கரை #காவல்துறை #ஊர்வலம்
#Chengalpattu #VinayagarChaturthi #VinayagarIdols #40VinayagarIdols #VinayagarProcession #Mamallapuram #MahabalipuramBeach #IdolProcession #VinayagarIdolImmersion #PoliceSecurity #ChengalpattuPolice #VinayagarFestival #GanpatiBappaMorya #Devotees #TamilNadu #ChengalpattuNews #MahabalipuramNews #Beach #TamilNaduPolice #Procession

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement