Advertisement

ஆளில்லாத கடைக்கு டீ ஆற்றுகிறார் ஆதவ் அர்ஜுனா – பரந்தாமன் கடும் கண்டனம்

ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்து மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளர் பரந்தாமன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதிக்குட்பட்ட கீழ்கரணை பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக தேர்தல் பணியாளர்களிடம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திமுகவை விமர்சித்து பேசியதற்கு பதிலடி கொடுத்தார்.

ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் ஆன நிலையில், தங்களது ஆட்சியின் சாதனைகளை கூறி 4 நிமிடங்கள் கூட வாக்கு கேட்க முடியாமல் திமுக, திமுக தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் திமுக சார்பில் தேர்தல் பணியாற்ற வந்துள்ள முன்னாள் அமைச்சர்கள் குறித்து ஆதவ் அர்ஜுனா விமர்சித்ததாக பரந்தாமன் தெரிவித்தார்.

Advertisement

ஆதவ் அர்ஜுனாவுக்கு தங்களது ஆட்சியின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பேச எதுவும் இல்லை என்றும், மதுராந்தகத்தில் வந்து காலி குடம் போல் சத்தம் போட்டுவிட்டு சென்றுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு கலைஞரின் பேரன் என்ற வரலாறு இருப்பதாகவும், ஆதவ் அர்ஜுனாவுக்கு என்ன வரலாறு உள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்.

திமுகவினர் வாக்குக்கு பணம் கொடுப்பதாக ஆதவ் அர்ஜுனா கூறியிருப்பது குறித்து கேள்வி எழுப்பிய பரந்தாமன், அதுகுறித்து பேச அவருக்கு தார்மீக உரிமை உள்ளதா என்றும் விமர்சித்தார். மேலும், திமுகவினரை தேவையில்லாமல் சீண்டினால் தெருவுக்கு தெரு மேடை அமைத்து பதிலளிப்பேன் என்றும் கூறினார்.

Advertisement

“ஆளும் வளரணும், அறிவும் வளரணும்; அதுதான் வளர்ச்சி” என்ற பட்டுக்கோட்டையாரின் வரிகளை குறிப்பிட்ட பரந்தாமன், ஆதவ் அர்ஜுனாவுக்கு அறிவு வளர்ந்துள்ளதா என்பதை தமிழக மக்களும், மதுராந்தகம் மக்களும் நன்றாக தெரிந்து வைத்திருப்பதாக தெரிவித்தார்.

மேலும், மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட தவெகவுக்கு சொந்தமாக வேட்பாளர் இல்லாததால், அதிமுகவில் இருந்து ஒருவரை அழைத்து வந்து வேட்பாளராக நிறுத்தியுள்ளதாக பரந்தாமன் குற்றம்சாட்டினார். “ஆள் இல்லாத கடைக்கு டீ ஆற்றுகிறார் ஆதவ் அர்ஜுனா” என்றும் அவர் விமர்சித்தார்.

தொகுதியில் பிரசாரத்தின்போது, மின்வெட்டு, மின்சாரக் கட்டண உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து பொதுமக்கள் தெரிவிப்பதாகவும் பரந்தாமன் கூறினார். தனது வெற்றி தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

#ஆதவ்அர்ஜுனாபேச்சு #பரந்தாமன் #மதுராந்தகம் #மதுராந்தகம்இடைத்தேர்தல் #திமுக #தவெக #தமிழகஅரசியல் #செங்கல்பட்டு #தேர்தல்பிரசாரம் #அரசியல்கண்டனம் #AadhavArjuna #Paranthaman #Madurantakam #MadurantakamByElection #DMK #TVK #TamilNaduPolitics #Chengalpattu #ElectionCampaign #PoliticalStatement

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement