Advertisement

CM VIJAY லண்டன் பயணம் – கடுமையாக விமர்சித்த நடிகை கஸ்தூரி

CM VIJAY லண்டன் பயணம் குறித்து நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சித்தது தாம்பரத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. விழாவில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கிய நடிகை கஸ்தூரி, பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பல்வேறு அரசியல் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிராக ஆபாசமாகப் பேசி குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தற்போதைய ஆளும் கட்சியினர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதனை பாராட்ட வேண்டும் என்றும் கஸ்தூரி தெரிவித்தார்.

Advertisement

இடைத்தேர்தல்கள் நடைபெறும்போது பொதுவாக ஆளும் கட்சியே வெற்றி பெறும் என்ற கருத்தை தெரிவித்த அவர், தற்போது அதிமுக, திமுக அல்லாமல் புதிய ஆளும் கட்சியாக தவெக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

தமிழக முதலமைச்சர் விஜய் லண்டன் சென்று முதலீடுகளை ஈர்த்துள்ளதாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களைச் சந்தித்து விரிவான தகவல்களை வெளியிடவில்லை என்றும் கஸ்தூரி விமர்சித்தார். முதலீடுகள் தொடர்பாக இதுவரை முறையான அறிக்கை வெளியிடப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Advertisement

வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோரின் செயல்பாடுகளைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்க்கு, கஸ்தூரி அறிவுரை வழங்கினார்.

பட்டினப்பாக்கம், மின்சாரத் துறை மற்றும் பரந்தூர் ஆகிய மூன்று விவகாரங்களும் தவெக அரசுக்கு சவால்களாக இருப்பதாக கஸ்தூரி குறிப்பிட்டார். மின்சாரத் துறையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், மின்வெட்டு பிரச்சினைக்கு அவர் தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.

திடீர் மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் பொதுமக்களை பாதிப்பதாகவும், குறிப்பாக விவசாயிகளுக்கு இது மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பதாகவும் கஸ்தூரி கூறினார்.

பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் தேவைதான் என்றாலும், பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றால், அதற்கு மாற்று இடம் எது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை திமுகவினர் ஊழல் செய்ததாகக் கூறி மட்டும் ரத்து செய்யக்கூடாது என்றும், தாம் நேரில் சென்று பார்த்தபோது அவ்வாறு எதுவும் தெரியவில்லை என்றும் கஸ்தூரி தெரிவித்தார். பரந்தூர் திட்டத்தை ரத்து செய்வது திமுகவை பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

புதிய சட்டமன்ற வளாகம் பட்டினப்பாக்கத்தில் அமைப்பது குறித்தும் கேள்வி எழுப்பிய கஸ்தூரி, கடக ராசி என்பதற்காக முதலமைச்சர் விஜய் கடலுக்கு அருகிலேயே இருக்க வேண்டும் என நினைக்கிறாரா என கேள்வி எழுப்பினார்.

இறுதியாக, முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தில் முதலீடுகள் தொடர்பான தகவல்களில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதே தனது விமர்சனம் என்றும் கஸ்தூரி தெரிவித்தார்.

#கஸ்தூரிபேட்டி #கஸ்தூரி #தாம்பரம் #விநாயகர்சதுர்த்தி #விஜய் #தமிழகமுதலமைச்சர் #தவெக #தமிழகவெற்றிக்கழகம் #லண்டன்பயணம் #முதலீடுகள் #பரந்தூர் #பட்டினப்பாக்கம் #மின்வெட்டு #மின்சாரபிரச்சனை #அரசியல்செய்திகள் #தமிழ்நாடுஅரசியல் #சென்னை #முதலீடுஈர்ப்பு #விமானநிலையம் #கஸ்தூரிகருத்து
#Kasthuri #KasthuriInterview #Tambaram #VinayagarChaturthi #Vijay #TamilNaduChiefMinister #TVK #TamilagaVettriKazhagam #LondonVisit #Investments #Parandur #Pattinapakkam #PowerIssue #PowerCut #PoliticalNews #TamilNaduPolitics #Chennai #Investment #Airport #KasthuriStatement

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement