பொத்தேரி கல்லூரி மாணவர்கள் குடியிருப்பில் சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் பிரபல தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி அருகே மாணவர்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கத்தில் இருப்பதாக சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீசார், மாணவர்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின்போது சுமார் 50 கிராம் கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசி உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மறைமலைநகர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போதைப்பொருட்களை பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கல்லூரி மாணவர்களை மறைமலைநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீசார் மாணவர்களிடம், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்கள் எங்கிருந்து கிடைக்கின்றன, யார் மூலம் வாங்கப்படுகின்றன, அவற்றை யார் சப்ளை செய்கின்றனர் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொத்தேரி அருகே கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மேற்கொண்ட இந்த திடீர் சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
#பொத்தேரி #கல்லூரிமாணவர்கள் #போதைப்பொருள் #போதைப்பொருள்சோதனை #கஞ்சா #போதைத்தடுப்பு #போதைப்பொருள்தடுப்புபிரிவு #மறைமலைநகர் #செங்கல்பட்டு #கல்லூரி #அடுக்குமாடிகுடியிருப்பு #போதைமாத்திரை #போதைஊசி #போலீஸ்சோதனை #போலீஸ்விசாரணை #குற்றச்செய்தி #தமிழ்நாடுசெய்திகள் #செங்கல்பட்டுசெய்திகள் #பொத்தேரிசெய்திகள் #போதைப்பொருள்ஒழிப்பு
#Potheri #CollegeStudents #DrugRaid #DrugControl #Drugs #Ganja #DrugSeizure #NarcoticsPolice #Chengalpattu #MaraimalaiNagar #CollegeStudentsNews #DrugInvestigation #DrugRaidNews #PoliceRaid #PoliceInvestigation #DrugAbuse #DrugPrevention #TamilNaduNews #ChengalpattuNews #PotheriNews












