Advertisement

காட்டாங்குளத்தூர் அருகே கோர விபத்து – தண்ணீர் லாரி மீது மாநகரப் பேருந்து மோதி…

காட்டாங்குளத்தூர் பேருந்து விபத்து: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னால் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரியின் பின்புறத்தில் சென்னை மாநகரப் பேருந்து அதிவேகமாக மோதியதில், பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

தாம்பரம் பகுதியில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் சென்று கொண்டிருந்த சென்னை மாநகரப் பேருந்து காட்டாங்குளத்தூர் பகுதியை நெருங்கியபோது, முன்னால் சென்று கொண்டிருந்த தண்ணீர் லாரியின் பின்புறத்தில் பலமாக மோதியதாக கூறப்படுகிறது.

Advertisement

மோதிய வேகத்தில் மாநகரப் பேருந்தின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது. விபத்தின் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் மற்றும் அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் மற்றும் பயணி ஒருவர் என 2 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார், விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாநகரப் பேருந்தின் அதிவேகமே விபத்துக்குக் காரணமா? அல்லது ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

#காட்டாங்குளத்தூர் #பேருந்துவிபத்து #காட்டாங்குளத்தூர்பேருந்துவிபத்து #மாநகரபேருந்து #தண்ணீர்லாரி #சாலைவிபத்து #விபத்து #செங்கல்பட்டு #தாம்பரம் #தேசியநெடுஞ்சாலை #போக்குவரத்துநெரிசல் #போலீஸ்விசாரணை #போக்குவரத்துபுலனாய்வு #சென்னை #காயம் #செங்கல்பட்டுசெய்திகள் #சாலைபாதுகாப்பு #விபத்துசெய்தி #தமிழ்நாடு #போக்குவரத்து
#Kattankulathur #BusAccident #KattankulathurBusAccident #MTCBus #WaterTanker #RoadAccident #Chengalpattu #Tambaram #NationalHighway #TrafficJam #TrafficInvestigation #PoliceInvestigation #Chennai #BusCrash #RoadSafety #TamilNaduNews #ChengalpattuNews #AccidentNews #PublicTransport #TrafficPolice

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement