Advertisement

CM விஜய் உத்தரவு எதிரொலி: முதல் நாளிலேயே 50 டாஸ்மாக் கடைகள் மூடல்

தமிழக முதல்வர் விஜய் அறிவித்த 717 டாஸ்மாக் கடைகள் மூடும் நடவடிக்கை வேகமாக அமலுக்கு வந்துள்ளது. இரண்டு வாரங்களுக்குள் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்த நிலையில், அதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக ஒரே நாளில் 50 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

சென்னை, கோவை, சேலம், திருச்சி மற்றும் மதுரை மண்டலங்களில் தலா 10 கடைகள் வீதம் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கோவை மண்டலத்தில் மட்டும் மொத்தமாக 50 டாஸ்மாக் கடைகள் மூடப்படவுள்ளதாக கூறப்படுவது கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertisement

காலை நேரத்தில் முதல்வர் உத்தரவு வெளியான நிலையில், அதே நாளில் மதியத்திற்குள் நடவடிக்கை தொடங்கியிருப்பது அரசின் அதிரடி செயல்பாடாக பார்க்கப்படுகிறது. “காலை உத்தரவு… மதியம் ஆக்சன்” என சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் கலவையான எதிர்வினைகள் உருவாகியுள்ளன. ஒரு தரப்பு மக்கள் இந்த முடிவை வரவேற்று வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகிலுள்ள மதுக்கடைகள் மூடப்படுவது சமூக நலனுக்கான நடவடிக்கை என பாராட்டப்படுகிறது.

Advertisement

மற்றொரு தரப்பு, டாஸ்மாக் வருவாய் குறைவு மற்றும் வேலைவாய்ப்பு பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும், அரசின் இந்த நடவடிக்கை தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் வரும் நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் கூடுதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement