Advertisement

வீட்டில் குடிசைத் தொழில்போல் கஞ்சா விற்ற பெண்

தாம்பரம் மாநகர காவல் எல்லையில் கஞ்சா விற்பனை செய்த பெண் கைது செய்யப்பட்ட நிலையில், மறைமலைநகரில் வீட்டுத் திருட்டு வழக்கில் 58 வழக்குகள் நிலுவையில் உள்ள நபரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், சிறுமி அளித்த பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

🚔 7 கிலோ கஞ்சா பறிமுதல்… பெண் கைது

தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பள்ளிக்கரணை திரு.வி.க. நகரைச் சேர்ந்த ரஹ்மத் நிஷா (36) என்பவர் வீட்டில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ரஹ்மத் நிஷாவை கைது செய்த போலீசார், போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் மேலும் தொடர்புடையவர்கள் உள்ளனரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

⚖️ சிறுமி புகாரில் வழக்குப்பதிவு

மேற்கு தாம்பரம் பகுதியில் 16 வயது பள்ளி மாணவி ஒருவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது தந்தை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக குழந்தைகள் உதவி எண் 1098-க்கு புகார் அளித்துள்ளார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவியை மீட்டு பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்தனர். பின்னர் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

🏠 58 வழக்குகளில் தொடர்புடைய திருடன் கைது

மறைமலைநகரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் ரொக்கம் மற்றும் 8 சவரன் நகைகள் திருடப்பட்ட வழக்கில், சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சூர்யா (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்மீது சென்னை மற்றும் புறநகர் காவல் நிலையங்களில் 58 வீட்டுத் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து 4 சவரன் நகைகள் மற்றும் 4 ஜோடி வெள்ளி கொலுசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement