Advertisement
,

தாம்பரம் காவல் ஆணையர் திடீர் ஆய்வு – போதைப் பொருட்கள், ரவுடிகளுக்கு எதிராக அதிரடி உத்தரவு

போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கவும், ரவுடிகளின் ஆதிக்கத்தை ஒடுக்கவும் காவல்துறை அதிகாரிகளுக்கு தாம்பரம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் மற்றும் சிங்கபெருமாள்கோவில் காவல் நிலையங்களில் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

தமிழக அரசு புதிய தாம்பரம் மாநகர காவல் ஆணையராக நஜ்முல் ஹோடாவை நியமித்ததைத் தொடர்ந்து, காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போதைப் பழக்கத்தைத் தடுக்கவும், ரவுடிகளின் நடவடிக்கைகளை ஒடுக்கவும் காவல்துறை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் காவல் ஆணையர் தினசரி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று மறைமலைநகர் மற்றும் சிங்கபெருமாள்கோவில் காவல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Advertisement

போதைப் பொருட்கள், ரவுடிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை

ஆய்வின்போது, போதைப் பொருட்களின் பயன்பாட்டைத் தடுக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும், போதைப் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைத் தினமும் கண்காணிக்க வேண்டும் என்றும், ரவுடிகளின் ஆதிக்கத்தை முற்றிலும் ஒடுக்கி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க உத்தரவு

சென்னை–திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கான காரணங்களை ஆய்வு செய்த காவல் ஆணையர், இனி வரும் காலங்களில் நெரிசல் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

போதைப் பொருட்கள் ஒழிப்பு, ரவுடிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைத்தல் ஆகியவற்றில் காவல்துறை நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement