Advertisement

41 புறநகர் ரயில்கள் ரத்து… தத்தளிக்கும் தாம்பரம்

சென்னை கடற்கரை–தாம்பரம் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக 41 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்களில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

📰 பராமரிப்பு பணி எதிரொலி… 41 ரயில் சேவைகள் ரத்து

📍 சென்னை கடற்கரை–தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நேற்று காலை 10.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை நடைபெற்றன. இதன் காரணமாக சென்னை கடற்கரை–தாம்பரம்–செங்கல்பட்டு வழித்தடத்தில் இரு மார்க்கங்களிலும் இயக்கப்பட்ட 41 புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில் தாம்பரம்–செங்கல்பட்டு, அரக்கோணம், திருமால்பூர் மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூரிலிருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

Advertisement

🚉 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில்களில் பயணிக்க பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனர். இதேபோல் தாம்பரம், குரோம்பேட்டை மற்றும் பல்லாவரம் பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதன் தாக்கமாக ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் மெதுவாக நகர்ந்தன. இதனால் தினசரி பயணம் மேற்கொள்ளும் அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

🚄 இதனிடையே, தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சில மெமு (MEMU) ரயில்கள் வழக்கமான 12 பெட்டிகளுக்கு பதிலாக 8 பெட்டிகளுடன் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதில் தாம்பரம்–விழுப்புரம், விழுப்புரம்–சென்னை கடற்கரை மற்றும் சென்னை கடற்கரை–திருவண்ணாமலை உள்ளிட்ட சில சேவைகள் அடங்கும். பயணிகள் பயணத்திற்கு முன் ரயில் நேர அட்டவணையை சரிபார்த்து திட்டமிட்டு செல்லுமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement