Advertisement

சொர்ணவாரி நெல் விவசாயிகள் கோடை மழையால் மகிழ்ச்சி

செய்யூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கோடை மழை பெய்து வருவதால், விவசாயிகள் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செய்யூர் வட்டத்திற்குட்பட்ட லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியங்களில், 84 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, 30,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்தில், நெல், மணிலா, தர்பூசணி உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகின்றன.

Advertisement

தற்போது, சொர்ணவாரி பருவத்திற்கு நெல் பயிரிட்டு, அதற்கான அடுத்தகட்ட பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். நாற்று நடவு முறையை காட்டிலும், பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு முறையையே கடைப்பிடித்துள்ளனர்.

நாற்று நடவு முறை நெல் சாகுபடி காட்டிலும், நேரடி நெல் விதைப்பு சாகுபடியில் செலவு குறைவதோடு, மகசூல் சமமாக கிடைப்பதாக, விவசாயிகள் கூறுகின்றனர்.

Advertisement

கடந்த மாதம் வெயில் வாட்டி வதைத்ததால், நெற்பயிர்கள் வாடி இருந்தன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் மிதமான கோடை மழை காரணமாக, வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement