Advertisement
, ,

ஹோர்முஸ்: நீரிணையில் மீண்டும் கப்பல் தாக்குதல்

ஹார்மூஸ் நீரிணை பகுதியில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. சமீபத்திய தகவல்களின் படி, குறைந்தது மூன்று சரக்கு கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் MSC Francesca என்ற கப்பல் ஈரான் கடற்கரைக்கு அருகில் தாக்கப்பட்டது. அது ஹோர்முஸ் நீரிணையை கடந்து ஓமான் வளைகுடா நோக்கி பயணித்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல்கள் அனைத்தும் ஈரானின் புரட்சிகர காவல்படை (Revolutionary Guard) மூலம் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மற்றொரு கப்பல் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், அந்த கப்பல் கடலில் நிறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், அதற்கு பெரிய சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Advertisement

இந்த சம்பவங்கள் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தைகளை சிக்கலாக்கியுள்ளது. Donald Trump, ஈரான் தனது திட்டத்தை முன்வைக்கும் வரை போர் நிறுத்தத்தை நீட்டிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், ஈரான் தரப்பில் “அச்சுறுத்தலின் கீழ் பேச்சுவார்த்தை நடத்த முடியாது” என்ற நிலைப்பாடு தொடர்கிறது.

இந்த தாக்குதல்கள் உலகளாவிய வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாப்பை குறித்து கவலை ஏற்படுத்தியுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement