Advertisement

ரூ.1.50 லட்சம் கொடுத்து வாங்கிய பைக்கில் தொடர் சிக்கல் – கொந்தளித்த TVS வாடிக்கையாளர்

ரூ.1.50 லட்சம் கொடுத்து வாங்கிய பைக்கில் தொடர் சிக்கல்: செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் ரூ.1.50 லட்சம் கொடுத்து வாங்கிய புதிய இருசக்கர வாகனத்தில் மூன்றாவது சர்வீஸ் முடிந்ததும் இன்ஜின் ஆயில் கசிவு ஏற்பட்டதாக வாடிக்கையாளர் குற்றம்சாட்டியுள்ளார். வாகனம் சர்வீஸ் சென்டரில் ஒப்படைக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு மேலாகியும் பழுது நீக்கப்படவில்லை எனவும் அவர் புகார் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவர் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் குடிநீர் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். தனது சொந்த பயன்பாட்டிற்காக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கல்பாக்கத்தில் உள்ள TVS ஷோரூமில் சுமார் ரூ.1.50 லட்சம் மதிப்பில் புதிய இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியுள்ளார்.

Advertisement

வாகனத்தை வாங்கிய பின்னர், தனது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் TVS சர்வீஸ் சென்டரில் கடந்த ஆறு மாதங்களில் மூன்று முறை வழக்கமான சர்வீஸ் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் மூன்றாவது சர்வீஸ் முடிந்து வாகனத்தை சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து செங்கல்பட்டு நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வாகனத்தின் இன்ஜினில் இருந்து ஆயில் கசிந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

Advertisement

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாலு, உடனடியாக வாகனத்தை மீண்டும் சிங்கப்பெருமாள் கோவில் TVS சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார். ஆனால், வாகனம் ஒப்படைக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு மேலாகியும் இதுவரை பழுது நீக்கும் பணிகள் மேற்கொள்ளப்படாமல் சர்வீஸ் சென்டரிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து சர்வீஸ் சென்டர் நிர்வாகத்திடம் கேட்டபோது, இன்னும் இரண்டு நாட்களில் வாகனத்தை சரி செய்து தருவதாக தொடர்ந்து கூறி வருவதாகவும், இதனால் தனது அன்றாட பணிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் பாலு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாலு கூறுகையில், “ரூ.1.50 லட்சம் கொடுத்து புதிய வண்டி வாங்கியுள்ளேன். ஆனால் தற்போது வண்டி இல்லாமல் தினமும் வேலைக்கு நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

புதிய இருசக்கர வாகனத்தில் மூன்றாவது சர்வீஸுக்குப் பிறகு இன்ஜின் ஆயில் கசிவு ஏற்பட்டதாக வாடிக்கையாளர் குற்றம்சாட்டியுள்ள நிலையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி, வாடிக்கையாளரின் பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

#சிங்கப்பெருமாள்கோவில் #TVS #TVSService #பைக்குஆயில்கசிவு #வாடிக்கையாளர்புகார் #செங்கல்பட்டு #Chengalpattu #SingaperumalKoil #CustomerComplaint

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement