Advertisement

“காவிரியில் இல்லாத வேகம் கைதில் மட்டுமா?” – மேகதாது விவகாரத்தைச் சுட்டிக்காட்டி சீமான் காரசாரம்”

காவிரி நதிநீர் உரிமையை மீட்பதில் துளியும் ஆர்வம் காட்டாத தவெக அரசு, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்வதில் மட்டும் காட்டும் ஏன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாதுவில் குறுக்கே அணை கட்டுவதில் கர்நாடக அரசு மிகுந்த முனைப்போடு செயல்பட்டு வருவதாகச் சுட்டிக்காட்டினார். அங்குள்ள ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சிகளும் தங்களது அரசியல் வேறுபாடுகளை மறந்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி மாநில உரிமைக்காக ஒருமித்துச் செயல்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Advertisement

ஆனால், தமிழ்நாட்டிலோ காவிரி நதிநீர்ச் சிக்கலில் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டும் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு, அரசியல் பழிவாங்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவரின் கைதில் மட்டும் தீவிரம் காட்டுவது ஏன் என்று வினவினார்.

கர்நாடகாவைப் போல் தமிழ்நாட்டிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து காவிரி மற்றும் மேகதாது விவகாரத்தில் உரிமைகளை மீட்கப் போராட வேண்டும் என்று சீமான் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement