Advertisement

பள்ளிகளில் முறைகேடுகள் இருந்தால் 14417 உதவி எண்ணில் புகார் அளிக்கலாம்

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, கல்விக் கட்டணம் உள்ளிட்ட விவகாரங்களில் ஏதேனும் முறைகேடுகள் அல்லது புகார்கள் இருந்தால், பொதுமக்கள் பள்ளிக்கல்வித் துறையின் கட்டணமில்லா உதவி எண்ணான 14417-ஐ தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

பள்ளிகளில் விதிமுறைகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தல், மாணவர் சேர்க்கையில் முறைகேடு, தேவையற்ற கட்டாய வசூல்கள் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நேரடியாக இந்த உதவி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

Advertisement

பெறப்படும் புகார்களின் அடிப்படையில் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் பெற்றோரின் நலனை கருத்தில் கொண்டு இந்த உதவி எண் செயல்படுத்தப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் தயக்கமின்றி புகார் அளிக்கலாம் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement