Advertisement

“கல்வி அமைச்சராகப் பிரகலாத் ஜோஷி நியமனம்” – மத்திய அரசு அதிரடி!

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடு சர்ச்சை தொடர்பாக மத்திய கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய மத்திய கல்வி அமைச்சராகப் பிரகலாத் ஜோஷி (Pralhad Joshi) நியமிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் நடத்திய தீவிரத் தொடர் போராட்டங்களை அடுத்து, தர்மேந்திர பிரதான் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா கடிதத்தைப் பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடனடியாக ஏற்றுக்கொண்டார்.

Advertisement

இதனைத் தொடர்ந்து, அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொண்டு புதிய கல்வி அமைச்சராகப் பிரகலாத் ஜோஷியை நியமித்துக் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வரும் பிரகலாத் ஜோஷி, தனது தற்போதைய பொறுப்புகளுடன் கூடுதல் பொறுப்பாகக் கல்வித் துறையையும் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான பிரகலாத் ஜோஷி, தேர்வுத் துறை சீர்திருத்தங்கள் மற்றும் தேசிய தேர்வு முகமையைச் (NTA) சீரமைக்கும் முக்கியமான பணிகளை உடனடியாக முன்னெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement