Advertisement

பொத்தேரியில் கஞ்சா வேட்டை – 30 மாணவர்கள் கைது

பொத்தேரியில் தங்கும் விடுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்ட போலீசார், கஞ்சா உள்ளிட்ட ஏராளாமான போதைப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

Advertisement

இந்த சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், அந்த கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸ் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து போதைப் பொருட்களை சப்ளை செய்தவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement