Advertisement

பரனூர் குடியிருப்புகளை அமைச்சர் ராஜ்குமார் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் பி. ராஜ்குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

குடியிருப்புகளில் செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், கட்டுமானத் தரம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் விவரங்களை கேட்டறிந்தார். மேலும், குடியிருப்புகளில் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பணிகள் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

Advertisement

இந்த ஆய்வின்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குநர் பிரபாகர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் மு. வீரப்பன், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் செ. தியாகராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் மேற்கொள்ளப்படும் குடியிருப்பு திட்டங்கள் பொதுமக்களுக்கு தரமான மற்றும் வசதியான வீடுகளை வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement