Advertisement

பரனூர் மேம்பால சாலை பணிகளில் எச்சரிக்கை பலகை இல்லை

செங்கல்பட்டு அருகே உள்ள சிங்கபெருமாள் கோவில் – பரனூர் ரயில்வே மேம்பாலத்தில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணிகள் தொடர்பாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த பணிகள் நடைபெற்று வருவதாலும், பணிகள் நடைபெறும் இடங்களில் எச்சரிக்கை பலகைகள் அமைக்கப்படாததால் விபத்துகள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த வழியாக தினமும் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள், சாலையின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். குறிப்பாக சாலை குண்டும் குழியுமாக இருப்பதுடன், இரவு நேரங்களில் போதுமான விளக்குகள் இல்லாததும் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

Advertisement

பரனூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் முதல் சுங்கச்சாவடி வரை இந்த சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறைவாக இருப்பதால், பல்வேறு விபத்துகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, உடனடியாக எச்சரிக்கை பலகைகள் அமைத்து, சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement