Advertisement

பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தமா? அரசியல், பொருளாதார வட்டாரங்களில் தீவிர விவாதம்

தமிழக அரசால் பரந்தூர் புதிய விமான நிலைய திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படும் தகவல், அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த திட்டம் முதலில் மத்திய மற்றும், மாநிலா அரசுகள் இணைந்து அறிவித்த முக்கிய உள்கட்டமைப்பு திட்டமாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5,746 ஏக்கரில் விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதுவரை 1,700 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

ஆனால், புதிய அரசாக தமிழ வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்து, விஜய் முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, திட்டத்தின் மீதான மறுபரிசீலனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, விவசாய நிலங்கள் பாதிப்பு. சுற்றுச்சூழல் கவலைகள். நீர்நிலைகள் அழிவு அபாயம், கிராம மக்கள் எதிர்ப்பு போன்ற காரணங்கள் மீண்டும் ஆய்வு செய்யப்படுகின்றன.

மேலும், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் “உணவு பதப்படுத்துதல் தொழில் பூங்கா” அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது விமான நிலையத் திட்டத்திற்கு மாற்று பயன்பாடாக பார்க்கப்படுகிறது.

Advertisement

அதே நேரத்தில் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டு தொகை திருப்பி வசூலிக்கப்படுமா?. நிலங்கள் மீண்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படுமா?, அரசால் ஏற்கனவே செய்யப்பட்ட செலவுகள் எப்படி சமாளிக்கப்படும்? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன:

இந்த விவகாரம் தொடர்பாக அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, திட்டம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டதா அல்லது தற்காலிகமாக நிறுத்தப்பட்டதா என்பது உறுதியாக தெரியவில்லை.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement