Advertisement

10 வயது சிறுமிகளிடம் அத்துமீறல்: போக்சோ சட்டத்தில் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே இரண்டு 10 வயது சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஏசி மெக்கானிக்கை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

படப்பை அருகே உள்ள ஒரு பகுதியில், இரண்டு 10 வயது சிறுமிகள் தங்களது உறவினர் வீட்டில் தங்கியிருந்தனர். அப்போது வீட்டில் பழுதடைந்திருந்த குளிர்சாதன (ஏசி) இயந்திரத்தை சரிசெய்ய ஏசி மெக்கானிக் கார்த்திக் என்பவர் வந்துள்ளார்.

Advertisement

வீட்டில் இருந்த சிறுமிகளிடம் கார்த்திக் தவறான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுமிகள் தங்களுக்கு நேர்ந்த சம்பவத்தை பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் வண்டலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கார்த்திக் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு வழங்கும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கார்த்திக் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்களும், குடும்பத்தினரும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement