Advertisement

அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் நீட் தேர்வு

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அடுத்தாண்டு முதல் NEET-UG தேர்வு கணினி வழியில் (Online Mode) நடத்தப்படும் என்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது நடைமுறையில் உள்ள OMR அடிப்படையிலான தேர்வு முறையை விட ஆன்லைன் முறையில் தேர்வு நடத்துவது பாதுகாப்பானதும், வெளிப்படையானதுமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

Advertisement

சமீபத்தில் NEET தேர்வில் ஏற்பட்ட வினாத்தாள் கசிவு சர்ச்சை மற்றும் தேர்வு முறைகேடுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்திய நிலையில், தேர்வு முறையை முழுமையாக மாற்றுவதற்கான நடவடிக்கையாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

மேலும், ஜூன் 21-ம் தேதி நடைபெற உள்ள NEET மறுதேர்வுக்கு மாணவர்களுக்கு கூடுதலாக 15 நிமிடங்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். தேர்வு மையங்களில் கூடுதல் பாதுகாப்பு, கண்காணிப்பு மற்றும் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

Advertisement

ரத்து செய்யப்பட்ட முந்தைய தேர்வுக்காக செலுத்தப்பட்ட தேர்வு கட்டணம் மாணவர்களுக்கு திருப்பி வழங்கப்படும் என்றும் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஓரளவு நிம்மதி ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான முக்கிய நுழைவுத் தேர்வாக இருக்கும் NEET தேர்வை கணினி வழியில் நடத்துவது குறித்து கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. இருப்பினும் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த மாற்றம் முக்கியமானதாக கருதப்படுகிறது

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement