Advertisement

மக்களை சந்தித்து குறைகளை கேட்ட எம்எல்ஏ தியாகராஜன்

செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் சௌ. தியாகராஜன், ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள அக்ஷரா வில்லாஸ் குடியிருப்போர் சங்க உறுப்பினர்களை நேரில் சந்தித்து, அப்பகுதி மக்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.

சந்திப்பின் போது, குப்பை மேலாண்மை, புத்தூர் ஏரியில் கழிவுநீர் கலப்பை தடுத்தல், தெருவிளக்குகள் அமைத்தல், சாலை பாதுகாப்பு தடுப்புகள் அமைத்தல் மற்றும் குடிநீர் வசதி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் எம்எல்ஏவிடம் வழங்கினர்.

Advertisement

மனுவை பெற்றுக்கொண்ட எம்எல்ஏ தியாகராஜன், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, மக்களின் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடி அவர்களின் கல்வி, விளையாட்டு மற்றும் எதிர்கால கனவுகள் குறித்து கேட்டறிந்தார். இந்த சந்திப்பு குடியிருப்போர் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement