Advertisement

“கர்நாடகா செல்லாதீர்.. சதி வலையில் வீழாதீர்!” – மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

காவிரி நதிநீர்ப் பங்கீடு தொடர்பாகக் கர்நாடக அரசுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்துவது என்ற ஆபத்தான சதி வலையில் முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் எக்காரணம் கொண்டும் சிக்கிவிடக் கூடாது என்றும், இத்தகைய முயற்சிகள் பல்லாண்டுகளாகத் தமிழகம் சட்டப் போராட்டம் நடத்திப் பெற்ற உரிமைகளைச் சிதைத்து நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்றும் திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பாகத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள காரசாரமான அறிக்கையில், “காவிரி உரிமைகளைப் மீட்டெடுக்கத் தமிழகம் உச்சநீதிமன்றத்தில் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து சட்டப்பூர்வமாகப் போராடி, நடுவர் மன்றத் தீர்ப்பையும் இறுதி ஆணையத்தின் தீர்ப்பையும் பெற்றிருக்கிறது. இந்நிலையில், காவிரி உரிமை தொடர்பாகக் கர்நாடக மாநிலத்திற்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தும் தவறான முடிவை முதலமைச்சர் விஜய் அவர்கள் உடனடியாகக் கைவிட வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்கிப் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் தமிழகத்தின் உரிமைகளைப் பறிக்க நினைக்கும் கர்நாடகத்தின் சதி வலையில் முதல்வர் சிக்கக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement

மேலும் தனது அறிக்கையில், “மாநிலத்தின் வாழ்வாதாரப் பிரச்சனையில் தன்னிச்சையாக முடிவெடுக்காமல், உடனடியாக அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியும், அனைத்து விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளின் கருத்துக்களைக் கேட்டறிந்தும் தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தில் தமிழகத்திற்கு இருக்கக்கூடிய சட்டப்பூர்வமான பலத்தைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எந்தவொரு விட்டுக்கொடுத்தலையும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” எனத் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார். காவிரி விவகாரத்தில் முதலமைச்சர் விஜயின் கர்நாடகப் பயணத்திற்கு எதிரான மு.க.ஸ்டாலினின் இந்த அதிரடி அறிக்கை தமிழக அரசியலில் மாபெரும் புயலையும் பரப்பரப்பையும் கிளப்பியுள்ளது.

 

Advertisement

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement