Advertisement

“காமன்வெல்த்தில்  தங்கம்!” – பளுதூக்குதலில் 190 கிலோ எடையைத் தூக்கி மீராபாய் சானு சாதனை!

சர்வதேச அளவில் புகழ்பெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான பளுதூக்குதல் பிரிவில், இந்தியாவின் முன்னணி பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஒட்டுமொத்தமாக 190 கிலோ எடையைத் தூக்கித் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இன்றைய போட்டியில் ஆரம்பம் முதலே தனது முழு திறமையையும் வெளிப்படுத்திய மீராபாய் சானு, ஸ்நாட்ச் மற்றும் க்ளீன் & ஜெர்க் ஆகிய பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்டு மொத்தம் 190 கிலோ எடையை அசட்டையாகத் தூக்கினார். இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து 3-வது முறையாகத் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றிப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

Advertisement

காமன்வெல்த் தொடரில் தொடர்ச்சியாக ஹேட்ரிக் தங்கம் வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ள மீராபாய் சானுவின் இந்த இமயச் சாதனைக்கு விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் இந்தியப் பொதுமக்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

Advertisement

 

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement