Advertisement
,

“அரசு பஸ்சில் சாதிய தீண்டாமையா?” 21-ம் எண் பேருந்தை இயக்க அமைச்சர் வன்னி அரசு அதிரடி உத்தரவு!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் பகுதியில் உள்ள பட்டியலின மக்கள் வசிக்கும் ‘அண்ணாநகர்’ கிராமத்திற்குள், 21-ம் எண் கொண்ட அரசு நகரப் பேருந்தை (Route No. 21) உடனடியாக இயக்க வேண்டும் என்று சமூக நீதி மற்றும் மனிதநேயத் துறை அமைச்சர் வன்னி அரசு, கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் அவர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இப்பகுதியில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பட்டியலினக் குடும்பங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களின் அன்றாடப் பயணங்களுக்கு இந்த 21-ம் எண் பேருந்தையே முழுமையாக நம்பியுள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக அண்ணாநகர் பகுதிக்குள் பேருந்தை முறையாக இயக்காமல் நடத்துநரும், ஓட்டுநரும் புறக்கணிப்பதாகவும், பட்டியலின மக்களை ஏற்றுவதில் சாதிய தீண்டாமை காட்டப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் புகார்கள் எழுந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

Advertisement

இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கையில் எடுத்த அமைச்சர் வன்னி அரசு, அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். “மக்களாட்சியில் சாதியின் பெயரால் அரசுப் பேருந்துகளில் சாமானிய மக்களைப் புறக்கணிப்பதை எக்காரணம் கொண்டும் சகித்துக் கொள்ள முடியாது” என்று கறாராகக் குறிப்பிட்ட அமைச்சர், அண்ணாநகர் பகுதிக்கு 21-ம் எண் பேருந்தை எவ்வித தங்குதடையுமின்றி உடனடியாக இயக்கவும், பேருந்து நிறுத்தங்களில் அனைத்து மக்களையும் சமமாக நடத்தவும் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். இனிவரும் காலங்களில் இப்பகுதியில் சாதிய தீண்டாமை புகார்கள் எழாத வண்ணம் போக்குவரத்துத் துறையும், மாவட்ட நிர்வாகமும் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement