Advertisement

“சம்பவம் நடந்த 5 நிமிடத்திற்குள் செந்தில் பாலாஜி எப்படி மருத்துவமனைக்குச் சென்றார்?” – அமைச்சர் நிர்மல் குமார் கேள்வி!

கரூரில் கடந்த காலத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாகத் திமுக மற்றும் தவெக இடையே அரசியல் மோதல் வலுத்து வரும் சூழலில், சம்பவம் நடந்த ஐந்து நிமிடத்திற்குள் செந்தில் பாலாஜி எப்படி கேமராவோடு மருத்துவமனைக்குச் சென்றார் என்று தவெக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் நிர்மல் குமார் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், கரூர் அசம்பாவிதம் குறித்து திமுகவினர் பரப்பி வரும் குற்றச்சாட்டுகளுக்குத் தனது பாணியில் விரிவான பதிலை அளித்தார். அப்போது பேசிய அவர், “கரூர் சம்பவம் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான அந்த நேரத்தில், பக்கத்திலேயே காத்துக்கொண்டு இருந்தது போல, சம்பவம் நடந்த அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் செந்தில் பாலாஜி எப்படித் கேமராக்களோடு மருத்துவமனைக்குச் சென்றார்? அங்கு என்ன நடக்கிறது என்ற விவரம் எங்களுக்கும், எங்களுடன் சம்பவ இடத்தில் இருந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கும் (SP) கூடத் தெரியாத போது, செந்தில் பாலாஜிக்கு மட்டும் அவ்வளவு சீக்கிரம் எப்படித் தெரிந்தது?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

Advertisement

மேலும், இந்தச் சம்பவத்தைத் திட்டமிட்டு அரசியலாக்கத் திமுகவினர் முயல்வதாகச் சாடிய அவர், அசம்பாவிதம் நடந்த உடனேயே அங்குத் கேமராக்களுடன் சென்று நாடகமாடியதன் பின்னணியில் அரசியல் உள்குத்துகள் ஏதேனும் உள்ளதா என்ற சந்தேகத்தை எழுப்பினார். கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்க முதலமைச்சர் விஜய் நேரில் வருகை தந்துள்ள இந்நாளில், அமைச்சர் நிர்மல் குமார் எழுப்பியுள்ள இந்தக் கேள்வி கரூர் மற்றும் சென்னை அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

 

Advertisement

 

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement