Advertisement

மறைமலைநகர்: 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வாலிபர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

மறைமலைநகர் அருகே உள்ள பகுதியில், சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதே பகுதியை சேர்ந்த ஜனார்த்தனன் (27) என்ற வாலிபர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.

Advertisement

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த சிறுமி, நடந்ததை தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர் உடனடியாக வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஜனார்த்தனனை கைது செய்த போலீசார், அவர்மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Advertisement

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், இதுபோன்ற குற்றங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement