Advertisement

மாமல்லபுரம் சிற்ப வளாகத்தில் தீ… தொல்லியல் சின்னங்கள் தப்பின

மாமல்லபுரம் பிடாரி ரதங்கள் சிற்ப வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குப்பையில் பற்றிய தீ சிற்ப வளாகத்திற்குள் பரவியது

மாமல்லபுரம் திருக்கழுக்குன்றம் சாலை அருகே, கருக்காத்தம்மன் கோவில் பகுதியில் அமைந்துள்ள பிடாரி ரதங்கள் சிற்ப வளாகத்தை ஒட்டியுள்ள குப்பையில் மாலை நேரத்தில் தீப்பற்றியது. ஆரம்பத்தில் வளாகத்திற்கு வெளியே மட்டுமே எரிந்த தீ, பின்னர் இரவு நேரத்தில் வளாகத்திற்குள் பரவி, புதர்களில் கொழுந்துவிட்டு எரிந்தது. இதையடுத்து  பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர்.

Advertisement

🚒 தீயணைப்பு வீரர்களின் விரைவு நடவடிக்கை

தகவல் கிடைத்தவுடன் மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதலில் வளாகத்திற்கு வெளியே எரிந்த தீயை கட்டுப்படுத்தினர். பின்னர் தொல்லியல் துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு, சிற்ப வளாக நுழைவாயில் திறக்கப்பட்டதையடுத்து உள்ளே பரவிய தீயையும் தீவிரமாக போராடி அணைத்தனர். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த மீட்புப் பணிக்குப் பிறகு தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

🏛️ சிற்பங்கள் பாதிப்பின்றி தப்பின

இந்த தீ விபத்தில் வளாகத்தில் உள்ள பழமையான சிற்பங்கள் எந்த சேதமும் இன்றி பாதுகாப்பாக தப்பியுள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் நீண்ட நேரம் கரும்புகை சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள் மற்றும் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்தனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement