Advertisement

மதுராந்தகம் அருகே கோர விபத்து: 3 பேர் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே கார் மீது அடையாளம் தெரியாத லாரி மோதிய விபத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.

🚨 ஜானகிபுரம் அருகே நேரிட்ட கோர விபத்து

புதுச்சேரியில் இருந்து சென்னை விமான நிலையத்தை நோக்கி புதுச்சேரியை சேர்ந்த 3 பேர் பயணம் செய்து கொண்டிருந்தனர்.   செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள ஜானகிபுரம் அருகே சென்றுகொண்டிருந்த  கார் மீது திடீரென லாரி ஒன்று பலமாக மோதியது. இதில் கார் தூக்கி வீசப்பட்டு பலமாக சேதம் அடைந்தது. விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர் அச்சத்தில் அங்கிருந்து லாரியுடன் தப்பிச் சென்றுள்ளார்.

Advertisement

💔 சம்பவ இடத்திலேயே 3 பேர் பலி

இந்த விபத்தில், புதுச்சேரி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த கோபு (46), தினேஷ் (15), இளஞ்செழியன் (54) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

👮 லாரியை தேடும் போலீசார்

இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் அடையாளம் தெரியாத லாரி குறித்து தகவல்களை சேகரித்து, அதனை ஓட்டிச் சென்ற ஓட்டுநரை கண்டறியும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் மற்றும் லாரி விபத்துக்குப் பிறகு எவ்வாறு தப்பிச் சென்றது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement