Advertisement

மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் தற்கொலை..

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மருத்துவமனையின் எக்ஸ்ரே வளாகத்தில் உள்ள அறையில், முதியவர் ஒருவர் ஃபேனில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இருந்ததை மருத்துவமனை ஊழியர்கள் கண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து உடனடியாக தமிழ்நாடு காவல்துறை மதுராந்தகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உயிரிழந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த நபர் யார், அவர் மருத்துவமனைக்கு ஏன் வந்தார், தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement