Advertisement

மதுராந்தகம் தவெக நிர்வாகியுடன் சேர்ந்து கணவரை அடித்த பெண்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த அபிராமி என்பவர், தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் தவெக மதுராந்தகம் நகர வர்த்தக அணி தலைவரான காதர் மொய்தீன் என்பவருடன் வெளியே சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த அபிராமியின் கணவர் சேகர், இருவரிடமும் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், சேகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தின் உண்மை நிலை குறித்து சிசிடிவி காட்சிகள் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் விளக்கங்களை பெற்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement