Advertisement

அண்ணாமலையாரை தரிசிக்க முடியாதா? – உயிரை பணயம் வைக்கும் பக்தர்கள்!

பேருந்துகள் குறைவால் பக்தர்கள் திணறிய நிலையில், ஓடும் பேருந்தில் ஏற முயன்ற ஆபத்தான காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்தின.

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு கிரிவளம் செல்ல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் திரண்டனர். மாதந்தோறும் பெளர்ணமி நாளில் பக்தர்கள் அதிக அளவில் செல்லுவது வழக்கம் என்றாலும், இம்முறை கூடுதல் பேருந்துகள் போதுமான அளவில் இயக்கப்படாததால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

Advertisement

பேருந்து நிலையத்திற்குள் திருவண்ணாமலை நோக்கி செல்லும் பேருந்துகள் வந்தவுடன், இடம்பிடிக்க பயணிகள் துரிதமாக ஓடி, முன்டியடித்து ஏற முயன்றனர். சிலர் பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்யும் ஆபத்தான சூழலும் ஏற்பட்டது.

இதனால் குடும்பத்துடன் வந்திருந்த பக்தர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர். சித்ரா பௌர்ணமி போன்ற முக்கிய தினம் முன்கூட்டியே தெரிந்திருந்தும் போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்.

Advertisement

#Kilambakkam #Tiruvannamalai #ChitraPournami #BusCrowd #TamilNaduNews

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement