Advertisement

அண்ணியிடம் அத்துமீறல், மைத்துனருக்கு விலங்கு

கேளம்பாக்கம் அருகே அண்ணியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படும் மைத்துனரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த படூர் துலுக்காணத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி அம்மு. இவர்களது வீட்டின் மற்றொரு பகுதியில் சுரேஷின் சகோதரர் வெங்கடேசன் உள்ளிட்ட குடும்பத்தினர் தனித்தனியாக வசித்து வந்தனர்.

Advertisement

இந்த நிலையில், சுரேஷ் வீட்டில் இல்லாத நேரங்களில் வெங்கடேசன், அம்முவிடம் ஆபாசமாக பேசியதுடன், ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அம்மு, கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், வெங்கடேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement