Advertisement

மகளுக்கு பாலியல் வன்கொடுமை – தந்தைக்கு ஆயுள் தண்டனை

சென்னையில் மகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு சென்னையில் வசித்து வந்த 13 வயது சிறுமி, தனது தந்தையால் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கண்ணகி நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தந்தையான முஜிப் கௌஸ் பாஷாவை கைது செய்தனர்.

Advertisement

இந்த வழக்கு செங்கல்பட்டு மாவட்ட போக்ஸோ (POCSO) சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கின் போது அரசு தரப்பில் சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இந்த வழக்கில் தீர்ப்பளித்த செங்கல்பட்டு மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இந்த தீர்ப்பு குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

What is your reaction?

இதே போன்ற செய்திகள்

Advertisement